Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

தமிழகத்தில் குழந்தைகள் காணாமல் போவது அதிகரித்துள்ளது. சிங்கப்பெண் அதிரடிப்படை என்ன செய்கிறது, எங்கே போனது?

பகிரவும் WhatsApp Facebook

நெய், வெண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வை ஆவின் நிறுவனம் திரும்பப் பெற வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது பழிவாங்கும் நடவடிக்கை என கூற முடியாது. அவர் மட்டுமல்ல யார், யார் மீதெல்லாம் குற்றச்சாட்டு உள்ளதோ அவர்கள் எல்லோரும் தண்டிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் குழந்தைகள் காணாமல் போவது அதிகரித்துள்ளது. சிங்கப்பெண் அதிரடிப்படை என்ன செய்கிறது, எங்கே போனது?

வருங்கால சிங்கபெண்களை கூட சிங்கப்பெண் படையால் காக்க முடியவில்லை. இந்த விஷயத்தில் முதல்வர் தனி கவனம் செலுத்த வேண்டும். முதல்வரின் திரைப்படத்தில்தான் த்ரில் காட்சிகள் வரும் என கேள்விபட்டுள்ளோம். 17 சிறைவாசிகள் தப்பியது ஏதோ திட்டமிட்ட சதியாக தெரிகிறது. ஆவின் பொருள்களின் விலையை தீபாவளிக்குள் குறைக்க வேண்டும். இவ்வாறு தமிழிசை வலியுறுத்தியுள்ளார்.

முந்தைய செய்தி
South Korea fines Google, Apple over unfair app market practices
அடுத்த செய்தி
IT firms poised to benefit from enterprise AI adoption

தொடர்புடைய செய்திகள்